மகாராஷ்ரா மாநில முதல்வராக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னாவிஸ்!
மகாராஷ்ர மாநில முதலமைச்சராக தேவேந்திர ஃபட்னாவிஸ் பதவியேற்றார்.அவருடன் துணை முதலமைச்சர்களாக ஏக்னாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் உள்ளிட்டோரும் பதவியேற்றனர்.
Advertisement
மகாராஷ்டிரா சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி பெரும்பாலான தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. முதலமைச்சரை தேர்வு செய்வதில் கூட்டணியில் இழுபறி நீடித்த நிலையில், தேவேந்திர ஃபட்னாவிஸ் ஒருமனதாக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனை மும்பை ஆளுநர் மாளிகையில் பட்னாவிஸ் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். அப்போது ஃபட்னாவீஸ் முதலமைச்சராவதற்கான ஆதரவு கடிதத்தை கூட்டணி கட்சித் தலைவர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் ஆகியோர் ஆளுநரிடம் சமர்ப்பித்தனர்.
இதேபோல் துணை முதலமைச்சர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித் பவார் ஆகியோர் பதவியேற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, ஜெ.பி. நட்டா மற்றும் பல்வேறு மாநில முதல்வர்கள், திரைநட்சத்திரங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.