செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் நீராடல்!

04:50 PM Feb 02, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் இதுவரை 42 கோடி பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பிரயாக்ராஜில் கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா வரும் 26ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில் கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய 3 புனித நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் பக்தர்கள் புனித நீராடி வழிபட்டு வருகின்றனர்.

இதுவரையிலான தரவுகளின் படி, இதுவரை சுமார் 42 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பக்தர்களின் வருகை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.

Advertisement

Advertisement
Tags :
42 crore devotees have bathed in Maha Kumbh Mela so far!FEATUREDMAIN
Advertisement