செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியம்! : பிரதமர் மோடி

01:29 PM Jan 13, 2025 IST | Murugesan M

மகா கும்பமேளா இந்தியாவின் காலத்தால் அழியாத ஆன்மீக பாரம்பரியத்தை எடுத்துக்காட்டுவதாகவும், நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டாடுவதாகவும் உள்ளது எனப்  பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

பிரயாக்ராஜில் மகா கும்பமேளா 2025 இன்று தொடங்கியது.  இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாரதத்தின் மாண்புகளையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது மிகவும் சிறப்பான நாள் என்று மோடி குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

Advertisement

"பாரதத்தின்  விழுமியங்களையும், கலாச்சாரத்தையும் போற்றும் கோடிக்கணக்கான மக்களுக்கு இது ஒரு மிகவும் சிறப்பு வாய்ந்த நாள்!

பிரயாக்ராஜில் தொடங்குகிற மகா கும்பமேளா 2025  எண்ணற்ற மக்களை நம்பிக்கை, பக்தி மற்றும் கலாச்சாரத்தின் புனிதமான சங்கமத்தில் ஒன்றிணைக்கிறது.

இந்தியாவின் காலம் கடந்த ஆன்மீக பாரம்பரியத்தை உள்ளடக்கிய மகா கும்பமேளா, நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
faith and traditionFEATUREDgovernment of indiaindia’s spiritual journeyindian cultureindian spiritualityindian traditionsinnovation indiakumbh celebrationsKumbh Melakumbh mela history telugumaha kumbh mela 2025 teluguMAINprime minister modiprime minister narendra modispiritual heritagespiritual indiaspiritual journeyspiritual tourism indiatimeless spirit
Advertisement
Next Article