மகா கும்பமேளா - திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிய பிரதமர் மோடி!
11:25 AM Feb 05, 2025 IST
|
Sivasubramanian P
உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் கும்பமேளாவில் பங்கேற்ற பிரதமர் மோடி திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார்.,
Advertisement
பிரயாக்ராஜில் மகா கும்பமேளா விழா கடந்த மாதம் 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மகா கும்பமேளா பிப்ரவரி 26 ஆம் தேதி மகா சிவராத்திரி வரை நடைபெறவுள்ளது. நாள்தோறும் ஏராளமாக பக்தர்கள் நீராடி வருகின்றனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல அரசியல்வாதிகள் மற்றும் பிரபலங்கள் விழாவில் பங்கேற்று நீராடி வருகின்றனர்.
Advertisement
ஸ்டீவ் ஜாப்ஸின் மனைவி லாரன் பவல் ஜாப்ஸ், கோல்ட்ப்ளே பாடகி கிறிஸ் மார்ட்டின் மற்றும் ஹாலிவுட் நடிகர் டகோட்டா ஜான்சன் உள்ளிட்டோர் மகா கும்பமேளாவிற்கு வருகை தந்துள்ளனர்.
Advertisement