மகா கும்பமேளா 2025' ஜன.13 முதல் பிப்.26-ம் தேதி வரை நடைபெறும்! : முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்
சனாதன தர்மத்தின் பாரம்பரியம், வளர்ச்சி மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஒரு புதிய பிரச்சாரமாக பிரயாக்ராஜ் 'மகா கும்பமேளா 2025' விளங்கும் என உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
Advertisement
லக்னோவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், 'மகா கும்பமேளா 2025' தூய்மையாகவும், பிரம்மாண்டமாகவும் நடத்தப்படும் என கூறினார். மகா கும்பமேளாவை முன்னிட்டு பக்தர்களின் தேவைக்காக ஒன்றரை லட்சம் கழிப்பறைகள் கட்டப்படுவதாகவும், சுமார் 1.6 லட்சம் குடில்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாவும் யோகி ஆதித்யநாத் குறிப்பிட்டார்.
மேலும், 'மகா கும்பமேளா 2025' உலக அளவில் சனாதன தர்மத்திற்கு புதிய அடையாளத்தை அளிக்கும் என்றும், பாரம்பரியத்தின் மீதான மரியாதை மற்றும் பிரதமர் மோடியின் உத்வேகத்தால், கடந்த 2019-ல் நடத்தப்பட்ட பிரயாக்ராஜ் கும்பமேளாவிற்கு யுனெஸ்கோவின் அங்கீகாரம் கிடைத்தாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் ஜனவரி 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 26-ந்தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள 2025 மகா கும்பமேளாவில் சுமார் 35 முதல் 45 கோடி பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.