மகா கும்பமேளாவில் கூட்ட நெரிசல் - பலர் காயம் அடைந்ததாக தகவல்!
07:35 AM Jan 29, 2025 IST
|
Sivasubramanian P
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவின் போது ஏற்பட்ட பலர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
உத்தரபிரதேசத்தின் பிரயாக்ராஜில் மகா கும்பமேளா கடந்த 14ம் தேதி தொடங்கியது. அடுத்த மாதம் 26ம் தேதி வரை 45 நாட்கள் நடைபெற உள்ள இந்த விழாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் திரண்டு திரிவேணி சங்மத்தில் புனித நீராடி வருகின்றனர்.
இந்நிலையில் அமாவாசையை முன்னிட்டு இன்று பக்தர்களின் கூட்டம் அதிக எண்ணிக்கையில் இருந்தது. இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதனால் அங்குள்ள தடுப்புகளை அகற்றி பக்தர்கள் வெளியேற முயன்றனர். அப்போது சுமார் 50 பக்தர்கள் காயம் அடைந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Advertisement
Advertisement