For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மகா கும்ப மேளா - கூட்ட நெரிசலை தடுக்க AI தொழில் நுட்பம் - சிறப்பு தொகுப்பு!

07:00 PM Jan 18, 2025 IST | Sivasubramanian P
மகா கும்ப மேளா   கூட்ட நெரிசலை தடுக்க ai தொழில் நுட்பம்   சிறப்பு தொகுப்பு

உலகின் மிகப் பெரிய இந்துமத திருவிழாவான மகா கும்ப மேளா, உத்தர பிரதேசத்தில் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. மகா கும்ப மேளாவில் இந்த முறை, சுமார் 45 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. அதனால், AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு முறைகளில் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பாதுகாப்பு நடவடிக்கைள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில், கூட்ட நெரிசல் தவிர்க்க முடியாதது. அதிலும் பலகோடி பேர் கலந்து கொள்ளும், கும்ப மேளா போன்ற திருவிழாக்களில், மக்களுக்கு உரிய பாதுகாப்பு கொடுப்பது, காவல் துறையினருக்கு பெரும் சவாலாகும்.

Advertisement

பக்தர்கள் அனைவரும் தங்கள் ஆன்மீக கடமைகளை முறையாக நிறைவேற்றிய பிறகு, மகிழ்ச்சியுடன் வீடு திரும்ப வேண்டும் என்று காவல்துறை விரும்பினாலும்,சமயங்களில் சில எதிர்பாராத அசம்பாவிதங்கள் நடந்து விடுவதுண்டு.

1954ஆம் ஆண்டு நடந்த கும்பமேளாவில், ஒரே நாளில், 400 க்கும் மேற்பட்டோர் கூட்ட நெரிசலில் சிக்கியும், ஆற்றில் மூழ்கியும் இறந்தனர். இது உலகளவில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் மிகப்பெரிய எண்ணிக்கையாகும். அதேபோல், 2013ம் ஆண்டில் பிரயாக்ராஜில் நடந்த கும்ப மேளாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரை விட்டனர்.

Advertisement

ஆனால், இந்த முறை, முதல்வர் யோகி ஆதித்ய நாத் தலைமையிலான உத்தர பிரதேச மாநில அரசு, கூட்ட மேலாண்மையை மேம்படுத்த சிறப்பான முறையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது.

கூட்டத்தைத் துல்லியமான மதிப்பீடு செய்யவும், சாத்தியமான பிரச்சனைகளை உடனடியாக கண்டறிந்து தீர்வு காணவும், இந்தமுறை, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை காவல்துறையினர் பயன்படுத்தி உள்ளனர்.

குறிப்பாக, ஒருங்கிணைந்த கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு மையம், கூட்டத்தை நிர்வகிப்பதில் ஒரு முன்னுதாரணமாக அமைந்துள்ளது. இது பக்தர்களின் வருகையை கட்டுப்படுத்த உதவுவது மட்டுமல்லாமல், பல்வேறு வகையான கண்காணிப்பிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த நெட்வொர்க் ஒரு கண்ணாடியால் ஆன கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அறையில் இருந்த படியே ஒருசில அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களால் மொத்த திருவிழாவும் மேற்பார்வையிடப்படுகிறது.

விழா நடைபெறும் இடத்திலும், திரிவேணி சங்கம முகாமுக்குச் செல்லும் சாலைகளிலும், கம்பங்களிலும், ட்ரோன்களிலும் சுமார் 300 க்கும் மேற்பட்ட CAMERA க்கள் நிறுவப் பட்டுள்ளன. மேலும் 2,750 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இத்தனை CAMERA-க்களும் முக்கிய பகுதியை மட்டுமல்லாமல், முழு நகரத்தையும் கண்காணிக்கின்றன என்று இந்த கட்டுப்பாடு மையத்தின் பொறுப்பாளரான காவல் கண்காணிப்பாளர் அமித் குமார் தெரிவித்திருக்கிறார்.

பொது மக்களுக்கு பாதுகாப்பு, கூட்டத்தை நிர்வகிப்பது மற்றும் குற்றங்களைத் தடுப்பது ஆகிய மூன்று நிலைகளில் இந்த காவல்துறை கண்காணிப்பு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்ட மேலாண்மையுடன் தீ கண்காணிப்புக்கும் இந்த செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் உதவுகிறது. அதாவது புகை அல்லது சிறிய தீப்பிழம்பு ஏற்பட்டால் கூட அதையும் துல்லியமாக, கண்டறிந்து உடனடியாக அசம்பாவிதம் நிகழாமல் தடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.

மகா கும்ப மேளா நடக்கும் பிரயாக்ராஜை மற்ற நகரங்களுடன் இணைக்க ஏழு முக்கியசாலைகள் உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு, அனைத்துத் திசைகளிலும் வாகனங்கள் நிறுத்தவும் பார்வையாளர்களின் வருகைக்கு ஏற்ப, போக்குவரத்தைச் சீரமைக்கவும், உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

வாகன நிறுத்துமிடங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படுகின்றன. ஒவ்வொரு வாகன நிறுத்துமிடத்திலும் பொருத்தப்பட்டுள்ள CAMERA-க்கள், அவை நிரம்பியுள்ளனவா அல்லது காலியாக உள்ளதா என்பதை கன கச்சிதமாக இந்த AI தொழில்நுட்பம் காட்டுகின்றன.

ஒரு வாகன நிறுத்துமிடம் அதன் கொள்ளளவை எட்டியதும், அதை மூடிவிட்டு, அடுத்த இடத்துக்கு வாகனங்களைச் செலுத்துவதில் இந்த AI-யின் பங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

ஒரு சதுர அடிக்கு மூன்று பேர் என்பதுதான் உலக கூட்ட மேலாண்மையின் தரநிலை யாகும். ஆனால், மகா கும்ப மேளாவில், அந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதாக , தெரிவிக்கப்பட்டுள்ளது. இது AI தொழில்நுட்பத்தின் சாதனையாகும்.

பொறுப்பும், பக்தியும் மிக்க இந்து துறவியான உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இந்த மகா கும்ப மேளாவை பாரம்பரிய நம்பிக்கை மற்றும் நவீனத்துவத்தின் சங்கமமாக மாற்றியுள்ளார்.

அதனால் தான் உலகமெங்கும் இருந்து வந்துள்ள பலகோடி பக்தர்கள் மிகவும் பாதுகாப்பாக திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

Advertisement
Tags :
Advertisement