மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்து விட்டார் - சிவராஜ் சிங் செளஹான் விமர்சனம்!
03:02 PM Dec 20, 2024 IST
|
Murugesan M
மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை ராகுல் காந்தி இழந்துவிட்டதாக மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் செளஹான் விமர்சித்தார்.
Advertisement
ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் காயமடைந்த பாஜக எம்.பி. சாரங்கியை டெல்லி மருத்துவமனையில் சிவராஜ் சிங் செளஹான் 2-ஆவது நாளாக சந்தித்து உடல்நலம் விசாரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயகத்தை அவமதிக்கும் செயல் காங்கிரஸின் டிஎன்ஏ-விலேயே இருப்பதாக விமர்சித்தார். கடந்த 1975-இல் அவசரநிலையை அறிவித்து ஜனநாயகத்தின் குரல் வளையை இந்திரா காந்தி நெரித்ததாக குற்றம்சாட்டிய சிவராஜ் சிங் செளஹான், இன்றைக்கு அதே மரபை ராகுல் காந்தி முன்னெடுத்துச் செல்வதாக கூறினார்.
Advertisement
இதன் மூலம் மக்களவை எதிர்க்கட்சி தலைவராக நீடிக்கும் தகுதியை அவர் இழந்துவிட்டதாக சிவராஜ் சிங் செளஹான் குறிப்பிட்டார்.
Advertisement
Next Article