மக்களின் மனங்களை வென்ற மாபெரும் தலைவர் எம்.ஜி.ஆர் : எல்.முருகன் புகழாரம்!
தமிழ் சினிமா துறையின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக மக்களின் முதலமைச்சராகவும் வாழ்ந்தவர் எம்.ஜி.இராமச்சந்திரன் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,
தமிழ் சினிமா துறையின் உச்ச நட்சத்திரமாகவும், தமிழக மக்களின் முதலமைச்சராகவும் வாழ்ந்த புரட்சித் தலைவர் 'பாரத ரத்னா' எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்த தினம் இன்று.
தான் நடித்த திரைப்படங்களின் மூலம், அரசியலில் ஊழல் புரையோடியவர்களுக்கு எதிரான ஆழமான கருத்துக்களை, மிகவும் புரட்சிகரமாக மக்களிடையே கொண்டு சேர்த்தவர்.
தமிழக சினிமா ரசிகர்களால் மக்கள் திலகம் என்றும், புரட்சித் தலைவர் என்றும் அன்போடு போற்றப்பட்ட, முன்னாள் முதல்வர் 'பாரத ரத்னா' #MGR அவர்களின் பிறந்த தினத்தில், அவரின் மக்கள் பணிகளை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
வாழ்ந்தவர் கோடி, மறைந்தவர் கோடி. மக்களின் மனங்களை வென்ற மாபெரும் தலைவரை போற்றி வணங்குவோம் என்று தெரிவித்துள்ளார்.