செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மக்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி - நடிகை கஸ்தூரி

02:30 PM Nov 23, 2024 IST | Murugesan M

தனக்கு உதவ முன்வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வதாக நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

Advertisement

தெலுங்கு மக்கள் குறித்து அவதூறு கருத்துக்கள் பேசியதாக நடிகை கஸ்தூரியை சென்னை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே ஆடிசத்தால் பாதிக்கப்பட்ட தனது மகனுக்கு உணவளிக்க வேண்டிய நிலையில் இருப்பதால், தமக்கு ஜாமின் வழங்கக்கோரி கஸ்தூரி தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணையின்போது காவல்துறை தரப்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்படாததால், நடிகை கஸ்தூரிக்கு எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியது.

Advertisement

தினமும் காலை 10 மணிக்கு எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி இன்று நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கடந்த நான்கு நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் செய்ததாகவும், தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி என தெரிவித்தார். மேலும் உதவியஅனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் கஸ்தூரி கூறினார்.

 

Advertisement
Tags :
MAINactress Kasthuridefamatory remarks about the Telugu peopleegmore police station
Advertisement
Next Article