செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியது - பிரதமர் மோடி

03:26 PM Mar 30, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement

மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் உள்ள மாதவ் நேத்ராலயா கண் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம், நவீன அறுவை சிகிச்சை மையங்கள் உட்பட பல்வேறு வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்படவுள்ளது. இந்த பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மகாராஷ்டிர முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில்  உரையாற்றிய பிரதமர் மோடி, பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு, ஆபரேஷன் பிரம்மா மூலம் இந்தியா முதன்முதலில் உதவிக்கரம் நீட்டியதென குறிப்பிட்டார். மக்கள் சேவையே கடவுள் சேவை என்பதை, ஆர்எஸ்எஸ் தான் உணர்த்தியதாக குறிப்பிட்ட பிரதமர் மோடி, ஆர்எஸ்எஸ் அமைப்பு ஆலமரம் போன்று தேசம் முழுவதும் வலிமையாக உருவெடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement
Tags :
FEATUREDMadhav Nethralaya Eye Treatment and Research CentreMAINModimodi speechNagpurPM Modiprime minister modiRSS
Advertisement