செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பை யாரும் மாற்ற முடியாது - நயினார் நாகேந்திரன்

01:29 PM Apr 13, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

மக்கள் வாயிலாக மகேசன் அளிக்கும் தீர்ப்பினை யாரும் மாற்ற முடியாது என தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நம்மைப் பார்த்து “பொருந்தாக் கூட்டணி” என்கிறார்களாம் சில திமுக ஏஜென்ட்டுகள்,ஆம்! இது திமுகவுக்கு பொருந்தா கூட்டணிதான். ஏனென்றால், இந்த கூட்டணிதான் ஸ்டாலினின் அவல ஆட்சியை வீட்டிற்கு அனுப்பப் போகிறது என தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டணிதான் தமிழக பெண்களின் மாண்பை கழுவிலேற்றிய கயவர்களை அமைச்சர்களாகக் கொண்ட ஒரு கேடு கெட்ட ஆட்சியை வேரறுக்கப் போகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisement

முதல்வர் ஸ்டாலின் அவர்களே! இந்த கூட்டணிதான் மக்களோடு மக்களாக நின்று உங்கள் கூடாரத்தையே விரட்டியடிக்கப் போகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த உண்மை உங்களுக்கும் தெரிந்திருப்பதால் மரண பயம் கண்ணில் தெரிகிறது போலும். பதற்றம் வேண்டாம், ஐயா ஸ்டாலின் அவர்களே! இன்னும் ஒரு வருட காலமிருக்கிறது. அதுவரை ஆடுங்கள்! ஆனால், மக்கள் வாயிலாக மகேசன் உங்களுக்கு அளிக்க உள்ள தீர்ப்பினை யாராலும் மாற்ற முடியாது என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINbjpDMKMK StalinNainar NagendranTamil Nadu BJP state president Nainar Nagendran
Advertisement