செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மசினகுடி அருகே அரசுப் பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை - பயணிகள் பீதி!

07:30 PM Nov 09, 2024 IST | Murugesan M
featuredImage featuredImage

நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே சென்று கொண்டிருந்த அரசு பேருந்தை காட்டு யானை ஒன்று ஆக்ரோஷமாக தாக்க முயன்றதால் பயணிகள் அச்சமடைந்தனர்.

Advertisement

உதகையிலிருந்து மசினகுடி வாழைத்தோட்டம், மாயார் உள்ளிட்ட கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பகுதிக்கு செல்லும் சாலை அடர்ந்த வனப்பகுதி என்பதால், வன விலங்குகளால் வாகனங்களில் செல்வோருக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

அந்த வகையில் மசினகுடி நோக்கி சென்ற அரசு பேருந்தை ஆக்ரோஷமாக யானை ஒன்று தாக்க முயன்றது. அப்போது துரிதமாக செயல்பட்ட பேருந்தின் ஓட்டுநர் தொடர்ந்து ஒலி எழுப்பியதால் யானை சாலையை விட்டு வனப்பகுதிக்குள் சென்றது. இது குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
MAINNilgiriMasinagudielephant try to attack busMasinakudi Banana Garden
Advertisement