சென்னையில் மடிக்கணினி தொடர்பான ஒப்பந்தம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு அண்ணாமலை நன்றி!
சென்னையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நன்றி தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது : "சிர்மா எஸ்ஜிஎஸ் டெக்னாலஜி லிமிடெட் மற்றும் எம்எஸ்ஐ இந்தியா இடையே சென்னையில் மடிக்கணினி அசெம்பிளி லைனைத் தொடங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் கலந்து கொண்டதற்காக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு தமிழக பாஜக சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மேக் இன் இந்தியா முன்முயற்சி மற்றும் பிஎல்ஐ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதற்கான பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் மத்திய அரசின் உறுதிப்பாட்டிற்கு இது ஒரு ஊக்கமாகும். புதிய வசதி தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைகளை வழங்கும்.
திருவள்ளூரில் விரைவில் தொடங்கப்படவுள்ள அம்ரித் பாரத் 2.0 ரயில்கள் மற்றும் புதுவயல் கிராமத்தில் கட்டப்பட்டு வரும் ரயில் சக்கர தொழிற்சாலையை ஆய்வு செய்ய சென்னை ஐசிஎஃப் வருகை தந்ததற்காகவும்அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.