மணிப்பூர் முகாம்களில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் வெளியே வரக்கூடாது - குக்கி அமைப்பு எச்சரிக்கை
மணிப்பூரில் உள்ள சி.ஆர்.பி.எப். வீரர்கள் முகாமை விட்டு வெளியே வரக்கூடாது என்ற குக்கி அமைப்பினரின் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Advertisement
மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதத்தில் மெய்தி மற்றும் குக்கி ஆகிய சமூக மக்களுக்கு இடையே மோதல் வெடித்தது. பல மாதங்களாக மோதல் போக்கு நீடித்துவந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு இயல்பு நிலை திரும்ப தொடங்கியது.
கடந்த 11-ம் தேதி ஜிரிபாம் பகுதியில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் குக்கி சமுதாயத்தை சேர்ந்த 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்களால் கடத்தப்பட்ட 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகள் ஆற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இதனையடுத்து மணிப்பூரில் மீண்டும் கலவரம் வெடித்தது. 3 அமைச்சர்கள் மற்றும் 6 எம்எல்ஏக்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
இந்நிலையில், பாதுகாப்பு படை வீரர்களுக்கு 'குக்கி' அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுதொடர்பாக குகி அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் தங்களின் முகாமை விட்டு வெளியேறக் கூடாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தடையை மீறி வெளியே வந்தால் ஏற்படும் விளைவுகளுக்கு பாதுகாப்பு படையினரே பொறுப்பேற்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிரிபாமில் பாதுகாப்பு படையினர் நடத்திய கண்மூடித்தனமாக தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் குக்கி அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர்.