மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதி!
12:16 PM Mar 26, 2025 IST
|
Murugesan M
மணிமுத்தாறு அருவியில் குளிக்க வனத்துறை அனுமதியளித்ததால் சுற்றுலாப்பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
Advertisement
கடந்த சில நாட்களாகக் காக்காச்சி, நாலுமுக்கு, குதிரைவெட்டிப் போன்ற தேயிலைத் தோட்ட பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக மணிமுத்தாறு அருவிக்கு நீர்வரத்தானது அதிகரித்துக் காணப்பட்டது.
இதனால் சுற்றுலாப்பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நீர்வரத்து குறைந்துள்ளதால், நான்கு நாட்களுக்குப் பின் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement