மண்டல, மகர விளக்கு பூஜை - சபரிமலையில் சுமார் 40,000 பக்தர்கள் தரிசனம்!
சபரிமலையில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
உலகப் புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி ஆகிய மாதங்களில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி கடந்த நவம்பர் 16ஆம் தேதி மண்டல பூஜை நிறைவடைந்த நிலையில், டிசம்பர் 30ஆம் தேதி மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டது. வரும் 14ஆம் தேதி மகரஜோதி தரிசனம் நடைபெறவுள்ள நிலையில், கடந்த சில நாட்களாகவே சபரிமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜையையொட்டி கடந்த நவம்பர் 16ஆம் தேதி முதல் தற்போது வரை 40 லட்சத்து 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
தினமும் சராசரி 90 ஆயிரம் பக்தர்கள் சாமி தரசினம் செய்து வருவதாகவும், மகர ஜோதி தரிசனத்தின்போது பக்தர்கள் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், சபரிமலையில் பாதுகாப்பான தரிசனத்தை பக்தர்களுக்கு உறுதி செய்வதே நோக்கம் என தேவசம் போர்டு குறிப்பிட்டுள்ளது.