மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுக்கும் கிறிஸ்தவ மிஷனரிகள் - இந்து முன்னணி குற்றச்சாட்டு!
கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் கிறிஸ்தவ மிஷனரிகள் மதமாற்றம் செய்ய கிராமம் கிராமமாக படையெடுத்துள்ளதாக, இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றம்சாட்டியுள்ளார்.
Advertisement
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு மிஷனரிகளின் மதமாற்ற வேலைகள் முன்னெப்போதும் இல்லாத வகையில் முடுக்கிவிடபட்டுள்ளதாக விமர்சித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் சார்லஸ் நகரை சேர்ந்த ஒரு பாதிரியார், ஆரியூர் கிராமத்தில், கிறிஸ்துமஸ் விழா என்ற பெயரில் மதப்பிரச்சாரத்தில் ஈடுபட்டதாகவும், அதை தட்டிகேட்ட இளைஞர்களை ஆதரவாளர்களை வைத்து பாதிரியார் தாக்கியதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனவே பல மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை தமிழகத்திலும் இயற்ற வேண்டும் என்றும், புதுக்கோட்டை சம்பவத்தில் பொய் வழக்கு போட்டு கைது செய்யபட்ட இளைஞரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் எனவும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வலியுறுத்தியுள்ளார்.