செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் :  தமிழிசை சௌந்தரராஜன்

07:14 PM Mar 17, 2025 IST | Murugesan M

மதுபான ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பாஜக மூத்த தலைவர்  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

தமிழ்நாட்டில் மதுபான ஊழல், மக்களோடு மக்களாக நமதுமக்களின் பணம் சூறையாடப்படுவதை தமிழக பாஜக நிச்சயம் வெளிப்படுத்தும் என்று  தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். .

Advertisement

ஊழலும் செய்வார்கள், அதைத் தட்டி கேட்டால் கைதும் செய்வார்கள் இதுதான் திராவிட மாடல், திமுக அரசிற்கு எவ்வளவு பயம் இருந்தால் பாஜக தலைவர்களை வீட்டிற்கே வந்து கைது செய்வார்? எவ்வளவு அடக்குமுறை இருந்தாலும்... மக்களுக்கு இந்த ஊழலைப் பற்றி முழு தகவல்களையும் நாங்கள் வெளிப்படுத்தியே ஆவோம், ஜனநாயக நாட்டில் அரசுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டு உள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட ஊழல் தடுப்பு அமைப்பினாலே அதிகாரப்பூர்வமாக ஆயிரம்கோடி ஊழல் நடந்திருக்கிறது என்று தெரிவித்த பின்பும் அதை எதிர்த்துப் போராட மக்களோடு மக்களாக உங்கள் வரிப் பணம் சுருட்டப்படுவதைத் தடுப்பது ஒவ்வொரு அரசியல் கட்சியின் கடமை அதைத்தான் பாரதிய ஜனதா கட்சி நடத்துகிறது. ஆனால் திராவிட மாடல் அரசு அதை அடக்குகிறது. உங்கள் அடக்குமுறை எவ்வளவு தீவிரமாக இருந்தாலும் ஊழலுக்கு எதிரான எங்களது அணுகுமுறை இதுதான் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMAINbjp protesttn bjpதமிழிசை சௌந்தரராஜன்We will reveal the full details about the liquor scam: Tamilisai Soundararajan
Advertisement
Next Article