மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் - பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!
11:22 AM Nov 29, 2024 IST
|
Murugesan M
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
மதுரை மாவட்டத்தில் உள்ள அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான உரிமம் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ள முதலமைச்சர், மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது என தெரிவித்துள்ளார்.
மக்கள் தொகை அதிகமுள்ள கிராமங்களில் வணிக ரீதியாக சுரங்கம் தோண்டுவது பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை பிரதமர் மோடி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
Advertisement
Next Article