மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது - அண்ணாமலை கண்டனம்!
மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிர் அணியினர் கைது செய்யப்பட்டதற்கு அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி, திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்தியும், தமிழக பாஜக மகளிரணி சார்பாக இன்று நடைபெறும் நீதிப் பேரணியில் கலந்து கொண்ட, மாநில மகளிரணித் தலைவி உமாரதி, , மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சரஸ்வதி, தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர், மற்றும் மகளிரணி நிர்வாகிகளைக் காவல்துறை கைது செய்திருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
ஜனநாயகத்துக்கு விரோதமான முறையில், திமுகவைச் சேர்ந்த பாலியல் குற்றவாளிகளை பாதுகாப்பதற்காக செயல்படும் திமுக அரசின் உண்மை முகம், பொதுமக்களிடையே அம்பலப்பட்டுக்கொண்டிருக்கிறது" என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.