For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம் - உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி!

07:15 PM Nov 21, 2024 IST | Murugesan M
மதுரையில் போலீஸ் தாக்கியதில் இளைஞர் படுகாயம்   உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

மதுரையில் காவல்துறையினர் தாக்கியதால் படுகாயம் அடைந்த  இளைஞர்  உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஊமச்சிகுளத்தை சேர்ந்த விஷ்ணு பிரசாத் என்ற இளைஞர் எலக்ட்ரீசியனாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது வீட்டு வாசலில் நின்று நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தபோது அங்கு சென்ற போலீசார், சந்தேக விசாரணைக்காக விஷ்ணு பிரசாத்தை கூடல் புதூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

Advertisement

தொடர்ந்து விசாரணை என்ற பெயரில் தொடர்ந்து 3 நாட்களாக அந்த இளைஞரை கூடல்புதூர் போலீசார் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

தொடர்ந்து 4வது நாளாக விஷ்ணு பிரசாத்தை காவல்துறையினர் தாக்கிய நிலையில், அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஷ்ணு பிரசாத்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement
Tags :
Advertisement