மதுரையில் 45 அடி உயர விசிக கொடி கம்பம் அமைக்க தற்காலிக அனுமதி!
மதுரை வெளிச்சநத்தம் பகுதியில் விசிக கொடி கம்பத்தை 45 அடி உயரத்துக்கு அமைக்க தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
Advertisement
மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை அடுத்த வெளிச்சநத்தம் பகுதியில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி கொடிக் கம்பம் 20 அடி உயரத்தில் இருந்தது. அதனை 45 அடி உயர கொடிக் கம்பமாக அமைத்து இன்று திருமாவளவன் கொடி ஏற்றுவதாக இருந்தது.
ஆனால் போலீசார் 20 அடி உயரத்தில் கம்பம் அமைக்க மட்டுமே மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கும் எனவும் அதற்கு மேல் கொடிக் கம்பம் நட்டால் சென்னையில் அனுமதி பெற வேண்டும் எனவும் கூறினர். இதனால் காவல்துறைக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினருக்கும் இடையே காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து அரசு அதிகாரிகள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது 45 அடி கொடி மரத்தில் தற்காலிகமாக கொடி ஏற்ற அதிகாரிகள் அனுமதி வழங்கினர். மேலும், கட்சித் தலைவர் கொடியேற்றிய பிறகு அதனை அகற்றிவிட வேண்டும் எனவும் நிபந்தனை விதித்தனர்.