மதுரையில் 5 வயது குழந்தையை கடத்த முயற்சி - வடமாநில இளைஞரை மடக்கிப்பிடித்த பொதுமக்கள்!
10:20 AM Dec 15, 2024 IST | Murugesan M
மதுரையில் 5 வயது குழந்தையை கடத்திய வடமாநில இளைஞரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.
அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் திருநகரைச் சேர்ந்த வினோத்குமார் என்பவரது 5 வயது மகள் வருணிகாவை, அவரது பாட்டி சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதனை நோட்டமிட்ட வடமாநில இளைஞர் ஒருவர், சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்றுள்ளார்.
Advertisement
அப்போது, சுதாரித்துகொண்ட ஆட்டோ ஓட்டுநர் பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தார்.
Advertisement
Advertisement