செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை : அரசு கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்!

05:55 PM Mar 27, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே அரசு கொள்முதல் நிலையங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் தேங்கிக் கிடப்பதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Advertisement

அய்யங்கோட்டை கிராமத்தில் உள்ள அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், தாங்கள் அறுவடை செய்த நெல்-ஐ விற்பனைக்காக விவசாயிகள் குவித்து வைத்துள்ளனர்.

நெல் கொள்முதல் செய்யும் அதிகாரிகளுக்குப் பலமுறை தகவலளித்தும், நெல்-ஐ வாங்க அவர்கள் வராததால் நெல் மூட்டைகள் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

Advertisement

அறுவடை செய்து 20 நாட்களாவதால் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் ஆங்காங்கே தேங்கிக் கிடக்கின்றன.

மழை பெய்தால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதால், இப்பிரச்சனைக்குத் தமிழக அரசு உடனடியாக தீர்வு காண வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
Madurai: Paddy bundles piled up at government procurement centers!MAINகொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
Advertisement