மதுரை தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதி செய்து தர வேண்டும் - வியாபாரிகள் வலியுறுத்தல்!
11:24 AM Dec 08, 2024 IST | Murugesan M
மதுரை தற்காலிக காய்கறி சந்தையில் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.
மதுரை மாட்டுத்தாவணி செல்லும் வழியில் உள்ள தற்காலிக காய்கறி சந்தை 2010ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. இரண்டாயிரத்தும் மேற்பட்ட கடைகள் உள்ள நிலையில், இங்கு உள்ள சாலை தற்போது குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது.
Advertisement
மேலும் 20 ஆயிரம் மக்கள் வந்து செல்லும் இந்த சந்தையில் வெறும் 3 கழிவறைகள் மட்டுமே உள்ளன. அதில் இரண்டு கழிவறைகள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
இதுகுறித்து அதிகாரிகளை சந்தித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என எம்.ஜி.ஆர் சென்ட்ரல் மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பினர் குற்றச்சாட்டுகின்றனர்.
Advertisement
Advertisement