மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் - கோயில் நிர்வாகம் வேண்டுகோள்!
மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே வசிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
மதுரை, அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் திருப்பணி வேலைகள் (கும்பாபிஷேகம்) துவக்க நிகழ்வாக, சமீபத்தில் அனைத்து கோபுரங்களுக்கும் பாலஸ்தாபனம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், நான்கு சித்திரை வீதிகளிலும் உள்ள பெரிய கோபுரங்களில் புணரமைப்பு பணிக்காக, சாரங்கள் கட்டப்பெற்று கோபுரங்களைச் சுற்றிலும் திரைத்துணி சுற்றப்பட்டுள்ளது.
எனவே. திருக்கோயிலின் அருகே வசிக்கும் பொதுமக்கள் மற்றும் பக்தகோடிகள், மேற்படி திருக்கோயில் கோபுரங்களின் பாதுகாப்பு கருதி தீபாவளி வான வேடிக்கையின்போது, எளிதில் தீப்பற்றக்கூடியதும், ஆபத்தை விளைவிக்கக்கூடிய பட்டாசுகள் மற்றும் வான் வெடிகளை வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் என கோயில் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.