மதுரை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் - நிர்வாக இயக்குநர் ஆய்வு!
மதுரை ரயில் நிலைய திட்ட பணிகள் குறித்து நிர்வாக இயக்குநர் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
Advertisement
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித் தடம் முதல் கட்டமாக திருமங்கலம் முதல் - ஒத்தக்கடை வரை 32 கிலோ மீட்டர் தூரத்துக்கு அமைக்கப்படுகிறது. திருமங்கலம் - வசந்த நகர் வரை உயர் நிலை பாலமும், வசந்தநகர் - தல்லாகுளம் பெருமாள் கோயில் வரை பூமிக்கடியிலும், தல்லாகுளம் - ஒத்தக்கடை வரை உயர்நிலை பாலமும் கொண்ட வழித்தடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மதுரை ரயில் நிலையத்திற்கு அருகே அமைய உள்ள சுரங்க மெட்ரோ ரயில் நிலைய இருப்பிடத்தை தேர்வு செய்வது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் திட்ட நிர்வாக இயக்குநர் சித்திக், மற்றும் திட்டப்பணிகள் இயக்குநர் அர்ச்சுனன் உள்ளிட்ட அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
மேல் மட்ட வழித்தடம் அமைக்க 3 ஆண்டுகளும், சுரங்கப்பாதைகள் அமைக்க நான்கரை ஆண்டுகளும் ஆகலாம் என மெட்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.