மதுரை விமான நிலையத்தில் அரிய வகை உயிரினங்கள் பறிமுதல்!
02:12 PM Mar 20, 2025 IST
|
Murugesan M
இலங்கையில் இருந்து மதுரை விமான நிலையத்திற்குக் கடத்திவரப்பட்ட அரியவகை உயிரினங்களை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
Advertisement
இலங்கையில் இருந்து மதுரை வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணம் செய்த வேலூரைச் சேர்ந்த பயணியின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர்.
அப்போது, ஒரு சூட்கேசில் இந்திய வனத்துறையால் தடை செய்யப்பட்ட அரிய வகை ஆமைகள், பல்லிகள், குட்டி பாம்புகள் என மொத்தம் 64 உயிரினங்கள் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது. அவற்றைப் பறிமுதல் செய்த அதிகாரிகள், பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.
Advertisement
Advertisement