செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்கு நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு - சின்ன உடைப்பு கிராம மக்கள் போராட்டம்!

10:22 AM Nov 17, 2024 IST | Murugesan M

மதுரை சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ள நிலையில், கையில் மண்ணெண்ணெய் கேன்களுடன் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக சின்ன உடைப்பு கிராமத்தில் நிலங்களை கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்கு அங்கு வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிகாரிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதை தொடர்ந்து கிராம மக்களை கட்டுப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தும் நோக்கில் அதிகாலை முதலே அங்கு ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டனர்.

Advertisement

இதனால் அதிர்ச்சியடைந்த சின்ன உடைப்பு கிராம மக்கள் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மண்ணெண்ணெய் கேன்களை கையில் ஏந்தி, தண்ணீர் தொட்டி மீது ஏறி கிராமமக்கள் காவல்துறையினருக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதனிடையே தமிழ்நாடு அரசு மூர்க்கமாக நடந்துகொள்வதாக தெரிவித்துள்ள கிராம மக்கள், இதே நடவடிக்கைகளை தொடர்ந்தால் திமுக அரசு நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
chinna utuppu people protestmadurai airport landMadurai's Chinna UtuppuMAINxpansion of Madurai Airport.
Advertisement
Next Article