செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மதுரை - ஹைதராபாத் (காச்சிகுடா) எக்ஸ்பிரஸ் ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு!

04:21 PM Dec 29, 2024 IST | Murugesan M

ஹைதராபாத் (காச்சிகுடா) - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

Advertisement

ஹைதராபாத் (காச்சிகுடா) - மதுரை வாராந்திர சிறப்பு ரயில் சேவை டிசம்பர் மாதம் வரை இயக்கப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த ரயில் சேவை மேலும் மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

அதன்படி கச்சக்குடாவில் இருந்து ஜனவரி 6 முதல் மார்ச் 31 வரை திங்கட்கிழமைகளில் இரவு 08.50 மணிக்கு புறப்பட்டு செவ்வாய்க்கிழமைகளில் இரவு 08.45 மணிக்கு மதுரை வந்து சேரும். மறு மார்க்கத்தில் மதுரையிலிருந்து ஜனவரி 8 முதல் பிப்ரவரி 02 வரை புதன்கிழமைகளில் அதிகாலை 05.30 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமைகளில் காலை 07.05 மணிக்கு கச்சக்குடா சென்று சேரும்.

Advertisement

இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள் ஒரு இரண்டாம் வகுப்பு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். இந்த ரயில்களுக்கான பயணச்சீட்டு முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.

Advertisement
Tags :
MAINHyderabad (Kachiguda)Hyderabad (Kachiguda) - MaduraiWeekly Special Train Service
Advertisement
Next Article