செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மது போதையில் அக்கா மகனை கொன்றுவிட்டு இளைஞர் தற்கொலை!

06:14 PM Apr 02, 2025 IST | Murugesan M

பெரியகுளம் அருகே மது போதையில் அக்கா மகனை இரும்புக் கம்பியால் அடித்துக் கொன்றுவிட்டு இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ஆனந்தி என்பவர், கணவரை இழந்த நிலையில், தனது 13 வயது மகன் நிஷாந்த் மற்றும் சகோதரர் பாண்டீஸ்வரனுடன் வசித்து வருகிறார்.

மூவரும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில், இரவு மது போதையில் வந்த பாண்டீஸ்வரன், ஆனந்தி மற்றும் நிஷாந்தை இரும்புக் கம்பியால் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில், நிஷாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆனந்தி படுகாயமடைந்தார். இருவரும் உயிரிழந்ததாக எண்ணி பாண்டீஸ்வரனும் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

வெகு நேரமாக மூவரும் வெளியே வராத நிலையில், பாண்டீஸ்வரனின் நண்பர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார், பாண்டீஸ்வரன், நிஷாந்த் ஆகியோரின் சடலங்களை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஆனந்தியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
A young man killed his sister's son under the influence of alcohol and then committed suicide by hanging himself!MAINஇளைஞர் தற்கொலை
Advertisement
Next Article