மத்திய அமைச்சர் அமித் ஷா தலைமையில் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்துவது குறித்து ஆய்வுக்கூட்டம்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் மூன்று புதிய குற்றவியல் சட்டங்களை அமல்படுத்துவது குறித்து தேசிய குற்ற ஆவணக் காப்பக அதிரிகாரிகளுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை செயலாளர், தேசிய குற்ற ஆவணக் காப்பக இயக்குனர் மற்றும் உள்துறை, என்.சி.ஆர்.பி, என்.ஐ.சி.ஆகியவற்றின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய அமித் ஷா, ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்திலும் புதிய சட்டங்கள் தொடர்பான செயலிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தொழில்நுட்ப பயன்பாட்டை அதிகரிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய அவர், அனைத்து குற்றவியல் வழக்குகளிலும் விசாரணை நடைமுறையை விரைவுபடுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
குற்றவியல் கண்காணிப்பு கட்டமைப்பு செயல்முறையின் முன்னேற்றத்தை வழக்கமான அடிப்படையில் கண்காணித்து, மூத்த காவல்துறை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும் என்று அமித் ஷா கேட்டுக்கொண்டார். பல்வேறு சூழல்களில் பயோமெட்ரிக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.