செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி மக்களை சந்திக்கிறார் - அண்ணாமலை தகவல்!

07:19 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மதுரை அ.வல்லாளப்பட்டி வர உள்ளதாக  தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்துள்ளதாவது : மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று, டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடுவதாக, மத்திய அரசு அறிவித்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் பிரதமர் மோடி, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தனர்.

இதற்கிடையே மக்கள் பிரதிநிதிகள் குழு, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தபோது, அவரை தங்கள் கிராமத்துக்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தனர். அதனை ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி நாளை மாலை 4 மணிக்கு, மதுரை அ.வல்லாளப்பட்டிக்குச் சென்று பொதுமக்களை நேரில் சந்திக்கவிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement
Tags :
annamalaiFEATUREDMaduraiMadurai A.VallalapattiMAINMinister Kishan Reddytamilnadu bjp presidenttungsten mine project cancel
Advertisement