செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதி தேவையில்லை - உச்ச நீதிமன்றம்

10:11 AM Jan 05, 2025 IST | Murugesan M

மத்திய அரசு அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய சிபிஐ-க்கு மாநில அரசின் அனுமதி தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

ஊழல் விவகாரம் தொடர்பாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணியாற்றும் மத்திய கலால் துறை அதிகாரி மற்றும் தெற்கு ரயில்வே அதிகாரி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

மாநில அரசு அனுமதி இன்றி சிபிஐ பதிவு செய்த வழக்கு செல்லாது என்று அவர்கள் இருவரும் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

Advertisement

இந்த வழக்கை விசாரித்த ஆந்திர உயர்நீதிமன்றம், மத்திய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்ய மாநில அரசின் அனுமதியை பெற வேண்டும் என்றுகூறி, அவர்கள் மீதான வழக்கை ரத்து செய்தது.

இதுதொடர்பான மேல்முறையீடு வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் சி.டி.ரவிகுமார் மற்றும் ராஜேஷ் பிண்டால் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், மத்திய அரசு ஊழியர்கள் மீதான வழக்கில் மாநில அரசிடம் அனுமதி பெறும்படி ஆந்திர உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டது.

மேலும், எந்த மாநிலத்தை சேர்ந்த மத்திய அரசு ஊழியர்கள் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தலாம் எனவும், மாநில அரசின் அனுமதியை சிபிஐ பெறத் தேவையில்லை என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

Advertisement
Tags :
cases against central government officials.cbiFEATUREDHyderabadMAINSouthern Railway officer corruption casestate governmentsupreme courtTelangana
Advertisement
Next Article