மத்திய தொழில் பாதுகாப்புப் படை குழுவினருக்குத் தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு!
05:45 PM Mar 31, 2025 IST
|
Murugesan M
போதைப்பொருள் கடத்தல், பெண் கல்வி உள்ளிட்டவை குறித்து சைக்கிளில் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ளும் மத்திய தொழில் பாதுகாப்புப் படை குழுவினருக்குத் தூத்துக்குடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement
மத்திய தொழில் பாதுகாப்புப் படை குழுவினரின் சைக்கிள் விழிப்புணர்வு பேரணியைக் கடந்த மார்ச் 7ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி வைத்தார். மேற்குவங்கத்தில் தொடங்கிய சைக்கிள் பேரணி ஒடிசா, ஆந்திரா, புதுச்சேரி வழியாகச் சென்று தமிழகத்தின் கன்னியாகுமரியில் நிறைவடைகிறது. இந்நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்த 57 பேர் கொண்ட குழுவினருக்குத் தூத்துக்குடி மத்திய தொழில் பாதுகாப்புப்படை கமாண்டர் வி.பி.சிங் உற்சாக வரவேற்பு அளித்துப் பாராட்டினார்.
Advertisement
Advertisement