மத்திய பட்ஜெட்டில் திரைப்படத்துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வந்தால் நன்றாக இருக்கும் : நடிகர் விஷால்
01:33 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
மத்திய பட்ஜெட்டில் திரைப்படத்துறைக்கு சாதகமான அறிவிப்புகள் வந்தால் நன்றாக இருக்கும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.
Advertisement
சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தனது உடல் ஆரோக்கியம் குறித்து அடுத்தவர்கள் பேசுவது அநாகரீகம் எனவும், ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யாரும் பேசக்கூடாது என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில், பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் எனவும், பெண்களுக்கு தற்காப்பு என்பது மிகவும் அவசியம் என்றும் தெரிவித்தார். அத்துடன், அரசியல் பயணம் குறித்து நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் அறிவிக்க உள்ளதாகவும் கூறினார்.
Advertisement
Advertisement