ஹோலி பண்டிகை கோலாகலம் - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் டிரம்ஸ் அடித்து உற்சாகம்!
மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் இல்லத்தில் ஹோலி பண்டிகை உற்சாக கொண்டாடப்பட்டது.
Advertisement
அப்போது ஏரளாமான பொதுமக்கள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சரின் இல்லம் முன்பாக குவிந்தனர். அவர்களுடன் இணைந்து டிரம்ஸ் அடித்து பங்கேற்பாளர்களை ராஜ்நாத் சிங் குஷிப்படுத்தினார்.
மேலும், அனைவரும் ஒருவர் மீது ஒருவர் வண்ண வண்ண பொடிகளை தூவி ஹோலி பண்டிகையை கொண்டாடினர். இதனால் அப்பகுதியே மகிழ்ச்சியால் களைகட்டியது.
இதேபோல் ஹோலி பண்டிகையை மக்களுடன் இணைந்து உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கொண்டாடினார். கோரக்நாத்தில் உள்ள கோயிலுக்கு வருகை தந்த யோகி ஆதித்யநாத், வழிபாட்டில் ஈடுபட்டார்.
இதனைதொடர்ந்து அங்குகூடியிருந்த மக்களுடன் ஹோலியை கொண்டாடினார். அவரின் வருகையை ஒட்டி கோயில் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. மேலும், வண்ண பொடிகளை தூவியும் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர்.
ராஜஸ்தானில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகையை கண்டு வெளிநாட்டு சுற்றுலாபயணிகள் ஆச்சரியமடைந்தனர். புஷ்கர் பகுதியில் மேள, தாளம் மற்றும் ஆட்டம், பாட்டத்துடன் ஹோலி பண்டிகை களைகட்டியது. அப்போது அங்கு சென்ற வெளிநாட்டு சுற்றுலாபயணிகளும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்கள் மீதும் அங்குள்ள மக்கள் கலர் பொடிகளை வீசினர். மேலும், இந்திய ஸ்டைலில் நடனமாடியும் வெளிநாட்டினர் உற்சாகமடைந்தனர்.
ஒடிசாவில் ஹோலி பண்டிகையை ஒட்டி மணல் சிற்பம் செய்து சுதர்சன் பட்நாயக் அசத்தியுள்ளார். மணல் சிற்பம் என்றாலே ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட புரி கடற்கரையும், சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கும் நினைவுக்கு வருவார்.
பல்வேறு முக்கிய தினங்களின் போது அவற்றிற்கு ஏற்றார் போல் மணல் சிற்பங்களை அவர் உருவாக்கி வருவது வழக்கம். அந்தவகையில், இன்று ஹோலி பண்டிகை என்பதால் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் செய்துள்ளார். இதனை மக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்து சென்றனர்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் ஹோலி கொண்டாட்டம் களைகட்டியது. மாணவர்கள் ஒன்றிணைந்து ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளை தூவியும், நடனமாடியும் பண்டிகையை கொண்டாடினர். அதைத்தொடர்ந்து ராதா - கிருஷ்ணா வேடமணிந்த சிறுவர்கள் ஹோலி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.