மத மாற்றத்துக்கு எதிராக தைரியமாக குரல் கொடுத்தவர் பிர்சா முண்டா - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புகழாரம்!
பழங்குடியின தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் அவரது சிலையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்து வைத்தார்.
Advertisement
பிர்சா முண்டாவின் பிறந்த தினத்தை பழங்குடியினரின் பெருமித தினமாக மத்திய அரசு கடைப்பிடித்து வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடியின தலைவரான பிர்சா முண்டா, ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்.
இந்நிலையில் பிர்சா முண்டாவின் 150-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் உள்ள பன்சேரா உத்யான் பகுதியில், அவரது சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டு சிலையை திறந்துவைத்தார்.
பின்னர் பேசிய அவர், பகவான் பிர்சா முண்டா நிச்சயமாக சிறந்த ஹீரோக்களில் ஒருவர் என கூறினார். 1875-ம் ஆண்டில் இடைநிலைக் கல்வி கற்கும் போதே மத மாற்றத்திற்கு எதிராக பிர்சா முண்டா குரல் எழுப்பியதாக அமித்ஷா பெருமைப்படக் கூறினார்.
முழு நாட்டையும், உலகில் 3-ல் இரண்டு பங்கையும் பிரிட்டிஷார் ஆண்டு கொண்டிருந்தபோதும் மத மாற்றத்துக்கு எதிராக தைரியம் காட்டியவர் பிர்சா முண்டா எனவும் அமித்ஷா கூறினார்.