செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மனநலம் பாதித்த தாய், மகன் மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சம்பவம்!

06:31 PM Jan 29, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்ட தாய் மற்றும் மகன் வெளியேறிய சம்பவம் சர்ச்சையாகியுள்ள நிலையில், சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்து மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அடுத்த வடக்கு மீனவன்குளத்தைச் சேர்ந்த சிவகாமியம்மாள், அண்மையில் உடல்நலக்குறைவு காரணமாக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை கவனித்துக்கொள்ள அவரது இளைய மகனான பாலன் உடனிருந்தார்.

இவர்கள் இருவரும் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என கூறப்படும் நிலையில், கடந்த 23ம் தேதி தனது தாயை மருத்துவமனையில் இருந்து பாலன் வெளியே அழைத்து வந்துள்ளார். சிறிது நேரத்தில் அவரது தாய் சிவகாமியம்மாள் உயிரிழந்த நிலையில், பாலன் தாயின் உடலை தனது சைக்கிளில் வைத்து கட்டி சொந்த ஊருக்கு தள்ளிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisement

சிவகாமியம்மாள் மருத்துவமனையை விட்டு வெளியேறிய பின்பு உயிரிழந்தாரா அல்லது மருத்துவமனையில் இருந்து வெளியேறும் முன்பே உயிரிழந்தாரா என்பது உறுதி செய்யப்படாததால் மருத்துவமனை நிர்வாகம் சிசிடிவி பதிவுகளை வெளியிட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால், சம்பவம் நடந்து ஒருவாரமான நிலையிலும் சிசிடிவி பதிவுகளை வெளியிட மருத்துவமனை நிர்வாகம் மறுத்து வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
Tags :
MAINMentally ill mother and son leave the hospital!
Advertisement