செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர்!

01:29 PM Jan 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஸ்ரீபெரும்புதூரில் மனித கழிவுகளை அள்ள, பேரூராட்சி அதிகாரி வற்புறுத்தியதாக, தூய்மை பணியாளர் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Advertisement

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், அவரை ஓரம்கட்டிவிட்டு, திமுக பிரமுகர் கருணாநிதி என்பவரின் சகோதரரான சேக்கிழார் பொறுப்பு மேற்பார்வையாளர் பணியை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் மின்மயான பகுதியில் இருந்த மனித கழிவுகளை அகற்றுமாறு, கெஜா என்ற தூய்மை பணியாளரை, சேக்கிழார் வற்புறுத்தியதாக கூறப்படுகிறது.

Advertisement

அதற்கு கெஜா மறுப்பு தெரிவிக்கவே, அவரை தகாத வார்த்தைகளில் சேக்கிழார் திட்டியதாக கூறப்படுகிறது. மேலும், தூய்மை பணியாளருக்கு மெமோவும் வழங்கப்பட்டுள்ளது. மனித கழிவுகளை அள்ளும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூய்மை பணியாளரை மனித கழிவுகளை அள்ளும்படி வற்புறுத்திய பொறுப்பு மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement
Tags :
MAINResponsible supervisor forced to dump human waste!tamil nadu news today
Advertisement