பெங்களூரு - மனைவியை கொலை செய்து சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவன் கைது!
பெங்களூருவில் மனைவியை கொன்று அவரது உடலை சூட்கேஸில் அடைத்து வைத்து விட்டு தப்பியோடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
Advertisement
தொட்டகண்ணஹள்ளி பகுதியில் ஐடி அதிகாரி ராகேஷ் ராஜேந்திர கங்காராம் - கௌரி கேடேகர் தம்பதி வசித்து வந்தனர். கடந்த சில நாட்களுக்கு முன் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறின்போது, ஆத்திரம் அடைந்த கணவன் ராகேஷ், மனைவியின் வயிற்றில் கத்தியால் குத்தி கழுத்தை அறுத்ததாக கூறப்படுகிறது.
பின்னர், மனைவியின் உடலை ஒரு டிராலி சூட்கேசில் வைத்து விட்டு புனேவுக்கு தப்பி சென்றுள்ளார். இதையடுத்து, பெண்ணின் உடலை மீட்ட போலீசார், புனேவில் ராகேஷை கைது செய்தனர்.
தற்கொலைக்கு முயன்ற அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதும், விசாரணைக்காக பெங்களூருவுக்கு அழைத்து செல்வோம் என்று போலீசார் தெரிவித்தனர்.