செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மனைவியை பிரியும் ஒபாமா? : ஹாலிவுட் நடிகையுடன் டேட்டிங் என வதந்தி!

09:05 AM Jan 30, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாரக் ஒபாமா மற்றும் மிச்சல் ஒபாமாவின் விவாகரத்து பற்றிய வதந்திகள் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், அவர்களின் இளைய மகள் சாஷா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகுந்த மனச்சோர்வுடன் நடந்து செல்வது போன்ற புகைப்படம் வெளியாகி பேசுபொருளாகியுள்ளது. இது பற்றிய ஒரு செய்தித் தொகுப்பை தற்போது காணலாம்.

Advertisement

அமெரிக்காவின் முன்னாள் அதிபரான பாரக் ஒபாமாவுக்கும், அவரது மனைவி மிச்சல் ஒபாமாவுக்கு இடையே கடந்த சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் இருந்து வருவதாக கூறப்படுகிறது. இவர்களின் இரு மகள்களும் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வரும் நிலையில், பாரக் ஒபாமாவுடன் வசிப்பதை தவிர்த்து வாஷிங்டன் வீட்டில் இருந்து மிச்சல் ஒபாமா வெளியேறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இதற்கிடையே, அண்மையில் நடைபெற்ற முன்னாள் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டரின் இறுதி சடங்கு மற்றும் அதிபர் டிரம்பின் பதவியேற்பு ஆகிய நிகழ்வுகளில் பாரக் ஒபாமா மட்டுமே கலந்துகொண்டார். பாரக் ஒபாமாவுடன் கலந்துகொள்ள வேண்டிய இரு முக்கிய நிகழ்வுகளை மிச்சல் தவிர்த்தது, அவர்களின் விவாகரத்து தொடர்பான வதந்திகளை ஊடகங்களிலும் விவாதப்பொருளாக்கியது.

Advertisement

இந்த களேபரத்துக்கு மத்தியில் பாரக் மற்றும் மிச்சல் ஒபாமாவின் இளைய மகளான சாஷா ஒபாமா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் மிகுந்த மனச்சோர்வுடன், கையில் புத்தகங்களை சுமந்தபடி நடந்து செல்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பேசுபொருளாகியுள்ளது. சாஷா அங்குள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இந்நிலையில், அவரது புகைப்படத்துடன் டாம் லுர்க் என்பவர் வெளியிட்ட எக்ஸ் பதிவில், பெற்றோரின் விவாகரத்து சர்ச்சைகளுக்கு பின், சாஷா ஒபாமா முதல் முறையாக வெளியே தென்பட்டுள்ளதாகவும், மிகுந்த பதற்றத்துடன் அவர் காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்து வதந்திகள் ஒருபுறமிருக்க முன்னாள் அதிபர் பாரக் ஒபாமா, ஹாலிவுட் நடிகையான ஜெனிஃபர் அனிஸ்டனுடன் டேட்டிங் உறவில் இருப்பதாகவும் வதந்திகள் பரவின. ஆனால் இது தொடர்பாக ஊடகங்களை சந்தித்த ஜெனிஃபர் அனிஸ்டன், பாரக் ஒபாமாவுடனான டேடிங் உறவை மறுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

ஹாலிவுட் நடிகரான பிராட் பிட்டை மணந்த ஜெனிஃபர் அனிஸ்டன், அவரிடம் இருந்து கடந்த 2005-ம் ஆண்டு விவாகரத்து பெற்றார். அப்போது, ஜெனிஃபருடன் திருமண உறவில் இருந்தபோதே பிராட் பிட் நடிகை ஏஞ்சலினா ஜூலியுடன் தொடர்பில் இருந்ததாக வதந்திகள் பரவின. அப்போது ஜெனிஃபர் எதிர்கொண்ட வதந்திகள் தொடர்பான முன் அனுபவம், பாரக் ஒபாமாவுடன் தொடர்புபடுத்தி வரும் வதந்திகளை கையாள அவருக்கு உதவியிருப்பதாக கூறப்படுகிறது.

அடுத்த சில நாட்களில் ஜிம்மி கிம்மல் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவில் பங்கேற்று பேசியபோதும், பாரக் ஒபாமாவுடனான உறவை மறுத்த ஜெனிஃபர், அவரை ஒருமுறை மட்டுமே சந்தித்துள்ளதாகவும், பாரக் ஒபாமாவைவிட தனக்கு மிச்சல் ஒபாமாவைத்தான் நன்றாக தெரியும் எனவும் கூறியிருந்தார். அண்மையில் வெளியான தகவலின்படி, வழக்கமாக வதந்திகளை கடந்து செல்லும் பழக்கமுடைய ஜெனிஃபர், தற்போது மிச்சல் ஒபாமாவின் மனநிலையை கருத்தில்கொண்டே ஊடகங்களை சந்தித்து விளக்கம் அளித்துள்ளது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து எழும் வதந்திகளுக்கு மத்தியில் கடந்த 17-ம் தேதி, மிச்சல் ஒபாமாவை "எனது வாழ்க்கையின் காதல்" என குறிப்பிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருந்தார் பாரக் ஒபாமா. அந்த பதிவிலும், "பாரக் ஒபாமா ஏன் மிச்சலின் இதுபோன்ற கொடூரமான புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்", "ஏன் இருவரும் ஒன்றாக வசிக்கவில்லை" போன்ற கேள்விகளை விமர்சகர்கள் முன்வைத்திருந்தது தனிக்கதை.

Advertisement
Tags :
FEATUREDHollywood actressIs Obama divorcing his wife? : Rumors of dating a Hollywood actress!MAINObama divorcing his wife
Advertisement