மன்மோகன்சிங் உடலுக்கு குடியரசு தலைவர் மரியாதை - குடும்பத்தினருக்கு ஆறுதல்!
01:24 PM Dec 27, 2024 IST
|
Murugesan M
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இறுதி அஞ்சலி செலுத்தினார்.
Advertisement
மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் இறுதி அஞ்சலிக்காக டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு சென்ற குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, அவரது உடலுக்கு மலர்வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அதனைத்தொடர்ந்து அவரது குடும்ப உறுப்பினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதேபோல் குடியரசு துணைத்தலைவர் ஜெகதீப் தன்கர், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, உள்ளிட்டோரும் மன்மோகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
Advertisement
Advertisement