மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை - ரூ.1,30,000 பறிமுதல்!
02:10 PM Nov 09, 2024 IST | Murugesan M
மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மயிலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
Advertisement
இதையடுத்து அங்கு நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத 1 லட்சத்து 30 ஆயிரத்து 340 ரூபாய் பணம் சிக்கியது. மேலும் திண்டிவனம் ஜெயபுரத்தில் உள்ள சார்பதிவாளர் வெங்கடேஸ்வரி வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
Advertisement
Advertisement