மயிலாடுதுறை மாவட்டத்தில் சிதிலமடைந்துள்ள கோயில்களை சீரமைக்க வேண்டும் என இந்து மகா சபாவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாங்குடி சிவலோகநாதர் கோயில், கஞ்சனூர் சுயம் பிரகாசர் கோயில் மற்றும் காசி விஸ்வநாதர் கோயில் பல ஆண்டுகளாக சிதிலமடைந்து காணப்படுகிறது. மேலும், பந்தநல்லூர் செல்லியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நடத்தப்படாமலும் உள்ளது.
இந்நிலையில், சேதமடைந்த கோயில்களில் மீண்டும் திருப்பணிகள் தொடங்குவதை நினைவூட்டும் வகையில், அறநிலையத்துறை அதிகாரிகளிடம் இந்து மகா சபாவினர் வெற்றிலை பாக்கு பழத்துடன் நூதன முறையில் மனு அளித்தனர்.