மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண் கைது!
மயிலாடுதுறையில் 4 ஆண்களை திருமணம் செய்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
கொடியம்பாளையம் கிராமத்தை சேர்ந்த லட்சுமி என்ற பெண், 10 ஆண்டுகளுக்கு முன் சிலம்பரசன் என்பவரை திருமணம் செய்துள்ளார். கணவர் சிலம்பரசன் இறந்த நிலையில், கடந்த 2017ம் ஆண்டு நெப்போலியன் என்பவரை லட்சுமி திருமணம் செய்துள்ளார்.
பின்னர் 2021ம் ஆண்டில் நெப்போலியனை விட்டு தலைமறைவான லட்சுமி, கடலூரை சேர்ந்த ராஜா என்பவரை திருமணம் செய்துள்ளார். இதையடுத்து கோயம்புத்தூருக்கு பணிமாற்றம் பெற்றுள்ளதாக ராஜாவிடம் கூறிவிட்டு லட்சுமி மீண்டும் தலைமறைவாகியுள்ளார்.
இதனிடையே ஈரோட்டை சேர்ந்த மற்றொரு நபரையும் லட்சுமி திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2வது கணவரான நெப்போலியன் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி லட்சுமி பலரை ஏமாற்றியது தெரியவந்தது.
இதையடுத்து லட்சுமியை கைது செய்த சீர்காழி போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.