செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மயிலாடுதுறை ஆட்சியருக்கு அண்ணாமலை கண்டனம்!

07:00 PM Feb 28, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான குழந்தை மீது தான் தவறு என கூறிய மயிலாடுதுறை ஆட்சியருக்கு  பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்,

சீர்காழியில், மூன்றரை வயது குழந்தை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் குறித்து மயிலாடுதுறை ஆட்சியர், அந்தக் குழந்தையின் மீதும் தவறு இருக்கிறது என்று முற்றிலும் பொறுப்பற்ற முறையில் கூறியிருக்கிறார் என அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்.

Advertisement

அவருக்கு, தமிழக பாஜக சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். தமிழகம் முழுவதும் தொடர்ந்து பெண்களும், பள்ளி மாணவிகளும், குழந்தைகளும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், முதலமைச்சரும், அமைச்சர்களும், பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழிபோட்டு, அவர்களின் தனிப்பட்ட விவரங்களை வெளியிட்டதன் தொடர்ச்சியே, மாவட்ட ஆட்சியரின் இந்த முட்டாள்தனமான பேச்சுக்குக் காரணம் என  அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார்

விளம்பர நாடகங்களை அரங்கேற்றி, தனக்குத்தானே பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கனவுலகில் சஞ்சரிக்கும் முதலமைச்சர் ஸ்டாலின், எப்போதுதான் இயல்பு நிலைக்கு வருவார்? என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement
Tags :
Annamalai condemns Mayiladuthurai collector!DMKFEATUREDMAINtn bjpஅண்ணாமலை கண்டனம்!
Advertisement