செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சைக்கிளில் சென்று சாமி தரிசனம் செய்த நடிகர் விஷால் !

10:39 AM Jan 30, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

திரைத்துறை மிகவும் மோசமான நிலையில் இருப்பதாக வேதனை தெரிவித்துள்ள நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கம் சில முன்னெடுப்புகளை எடுக்க வேண்டியது அவசியம் என தெரிவித்துள்ளார்.

Advertisement

சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலுக்கு நடிகர் விஷால் சைக்கிளில் வந்து, சுவாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தாம்  ஒரு வாக்குறுதி கொடுத்ததாகவும், அதற்கு ஏற்ற மாதிரி படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதாகவும் கூறினார்.

வாக்குறுதியை நிறைவேற்ற ஆரம்பித்து விட்டதாகவும், டேன்.  12 ஆண்டுகள்  கழித்து ஒரு படம் வந்து வெற்றியடையும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.

Advertisement

திரைத்துறையில் சிறிய பட்ஜெட் படங்களின் வெற்றி கேள்விக்குறியாகி வருவதாகவும் தெரிவித்தார். இதற்காக தயாரிப்பாளர் சங்கம் சில முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார்.

Advertisement
Tags :
actor vishalActor Vishal cyclingChennaiKapaleeswarar templeMAINmylapore
Advertisement