மயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!
11:00 AM Jan 22, 2025 IST | Murugesan M
திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும் நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் 200 -க்கும் மேற்பட்ட காளைகளும், ஏராளமான மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
Advertisement
போட்டியில் வெற்றி பெற்ற காளைகளுக்கு முதல் பரிசாக 60 ஆயிரம் ரூபாய், 2-ம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய், 3-ம் பரிசாக 40 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டன. எருது விடும் நிகழ்ச்சியை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
Advertisement
Advertisement